பரிசுத்த வேதாகமம் போதிக்கிறதை நாங்கள் நம்புகிறோம்
என்னவென்றால், எல்லா மனுஷரும் பாவம் செய்தார்கள். பாவம் ஒரு போதும் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது. எனவே இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்ததன் மூலமாக நம்முடைய பாவத்தின் தண்டனையை அவர் ஏற்றுக் கொண்டார். நாம் அதை நம்முடைய இருதயத்தில் விசுவாசித்து, பாவங்களை அறிக்கையிட்டு, நம்முடைய பாவங்களுக்காக மனம் வருந்தி தேவனிடம் மன்னிப்பை கேட்பதன் மூலம் பாவத்திலிருந்து விடுவிக்கப்படுகிறோம் எனவே இந்த பூமிக்குரிய வாழ்வு முடிந்த பின் நாம் பரலோக ராஜ்யத்தில் நமக்காக ஆயத்தம் பண்ணின ஸ்தலத்தை பெற்றுக்கொள்ள இயலும்